பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24. ஆஸ்வங்கள்" வையகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டாலும், இன்னும் கடலுக்கு அப்பால் கண்டம் எதுவும் இருக்கிறதா என்று ஆசை கொள்ளல் இயல்பு. ஆசைக்கு ஒர் அளவில்லை. கடல் முழுதும் நீர் நிறைந்திருப்பினும், அதற்கு அமைதியில்லை. அதுபோல், எத்தனை எத்தனை இன்பங்கள் இருப்பினும், மனித குலத்திற்குத் தெவிட்டுதல் இல்லை!"

உலக வாழ்வாகிய பெரிய விஷ விருட்சத்திற்கு வேராக அமைந்துள்ளது பேதைமை. 1. הלך הלך பிக்குகளே! எல்லாப் பொருள்களும் அனல் பற்றி எரிகின்றன. பிக்குகளே, பற்றி எரியும் இந்தப் பொருள்கள் யாவை? பிக்குகளே கண் பற்றி எரிகின்றது: உருவங்கள் எரிகின்றன: கட்புலனும் எரிகின்றது. கண்ணால் பார்த்த பொருள்களின் கருத்துக்களும் எரிகின்றன; புலன்களின் மூலம் உணரும் நல்லன, தீயன அல்லாதன ஆகிய எல்லா உணர்வுகளும் எரிகின்றன. எதைப் பற்றிக்கொண்டு இவைகள் எரிகின்றன, ஆசைத் தீயிலும், துவேஷத்தியிலும், வெறிகொண்ட பற்றுத் தீயிலும், ஜனனம், முதுமை, மரணம், துக்கம், புலம்பல், துயரம், சோகம், அவநம்பிக்கை ஆகியவற்றால் தோன்றும் தியிலும் எரிகின்றன. ஆசாபாசங்கள், வெகுளி, பேதைமை, வெறுப்பு முதலியவை இருக்கும்வரை நெருப்பு தான் பற்றி எரிவதற்குரிய பொருள்கள் இருக்கும்வரை - தீ எரிந்துகொண்டேயிருக்கும். அதனால் ஜனன மரணங்களும், அவைகளைச் சார்ந்த துயரங்களும் நேர்ந்து கொண்டேயிருக்கும். ' нт іт 'நான்' என்னும் அகங்காரத்திற்கு அடிமைகளாகிக் காலையிலிருந்து இரவு வரை அதற்கே ஊழியம் செய்து கொண்டிருப்பவர்களே பிறப்பு, முதுமை, பிணி, மரணம் ஆகியவற்றைப் பற்றி ஓயாது அச்சம் ஆஸ்வங்கள் நான்கு காமாவலம், பாவாஸ்வம், திட்டாலவம், அவிஜ்ஜாஸ்வம். காமாஸ்வம் - சிற்றின்பத் தேட்டம்: பாவாலவம் - பிறப்புக்குக் காரணமான உயிராசை திட்டாலவம் - கற்பனையான பொய்க் காட்சி, அவிஜ்ஜாலவம் - அறியாமை, 48 | புத்தரின் போதனைகள்