இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25. இரகசியம் ஒ. பிக்குகளே மூன்று விஷயங்கள் இரகசியமாக நடைபெறுபவை: காதல் விஷயங்கள், புரோகிதர்களின் ஞானம், சத்திய மார்க்கத்திற்கு விலக்காயுள்ள தவறுகள். ஒ. பிக்குகளே காதல் கொண்டுள்ள பெண்கள், வெளிப்படையாகத் தெரிவதை அஞ்சி, இரகசியத்தை நாடுகிறார்கள்; ஒ பிக்குகளே, தங்களுக்கு (சுவாமி பிரசன்னமாகி) அருளிய விசேஷமான செய்திகள் உண்டு என்று உரிமை கொண்டாடும் புரோகிதர்களும் வெளிப்படையாகத் தெரிவதை அஞ்சி, இரகசியத்தை நாடுகிறார்கள்; உண்மையான நெறியிலிருந்து விலகிச் செல்லும் யாவரும், வெளிப்படையாகத் தெரிவதை அஞ்சி, இரகசியத்தை நாடுகிறார்கள். " 52 | புத்தரின் போதனைகள்