பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28. புத்தர் ஒ. பிக்குகளே மாநில மக்களிடம் கொண்ட அன்பினாலே, அவர்களுடைய இன்பத்திற்காகவும், நலனுக்காகவும், தேவர்கள் மனிதர்களின் இன்பத்திற்காகவும், நலனுக்காகவும் ஒப்பற்ற ஒருவர் தோன்றுகிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரணஞானமடைந்து, உயர்நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார். அறிவு ஆற்றல்களினாலே ஒப்பற்ற ஒருவர். இவ்வுலகிலே அவதரித்திருக்கிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார் இவரே பூரண ஞானமடைந்து, உயர்நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார். " † To நான் அகங்காரத்தை அழித்து விடுதலை அடைந்துள்ளேன். எனது உடல் புனிதமாகியுள்ளது. எனது உள்ளம் ஆசையற்றுள்ளது. எனது இதயத்தில் உண்மை உறைந்துள்ளது. நான் நிருவான முக்தியைப் பெற்றுள்ளேன். அதனால் தான் என் தோற்றம் சாந்தி நிறைந்திருக்கிறது. என் கண்கள் பிரகாசிக்கின்றன. இப்போது பூமியிலே எனது சத்திய ராஜ்யத்தை அமைக்க விரும்புகிறேன். இருளால் சூழப்பட்டவர்களுக்கு ஒளியளித்து, மக்களுக்கு நித்திய வாழ்வின் வாயிலைத் திறந்துவைக்க விரும்புகிறேன்! " + T நான் யாவற்றையும் வென்றவன், நான் யாவற்றையும் அறிந்தவன், வாழ்வின் நிலைகள் யாவற்றிலம் கான் ஒட்டுப் பற்றில்லாதவன். எலலாவற்றையும் நான் துறந்தாயிற்று, அவாவை அழித்ததால் நான் முக்தியடைந்தவன். எல்லாவற்றையும் நானே கற்றுக்கொண்டபின், எவரை என் குருவென்று காட்டுவேன்?" Hk. Er ஆசைத் தளையால் கட்டுண்டு நெடுங்காலம் அலைந்து திரிந்து, இதுவரை எத்தனையோ பிறவிகளெடுத்துக் களைத்துவிட்டேன்! பலவிதமான பிறவிகளை நான் எடுத்தாயிற்று - இந்த (உடலாகிய) குடிலைக் கட்டியவனை நான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாயுள்ளது." + Ar புத்தர் ஞானமடைந்த பின் உபாகர் என்ற துறவியிடம் கூறியது. புத்தர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றவுடன் கூறியவை இவை. ப. ராம ஸ்வாமி 57