பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடிலைக் கட்டிய கொற்றனே! இப்போது உன்னைக் கண்டுகொண்டேன் குடிலை மறுபடி நீ கட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்துவிட்டன: குடிலின் முகடும் குலைந்து விட்டது. என் சித்தம் நிருவானப் பேற்றில் இலயித்து விட்டது: (அதனால்) ஆசைகள் அவிந்தொழிந்துவிட்டன. "

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்; அரிது அரிது மானிட வாழ்க்கை; அரிது அரிது நல்லறம் கேட்டல்: அரிது அரிது புத்தநிலை அடைதல். ' + or பிக்குகளே சந்திரனும் சூரியனும் உலகிலே உதயமாவதற்கு முன்னால் பேரொளியும், ஜோதிமயமான பெரும் பிரகாசமும் இருப்பதில்லை... பிக்குகளே! அதேபோல, ஒரு ததாகதர் - அருகத்து, ஸம்மா, ஸம்புத்தர் - தோன்றுவதற்கு முன்னால் பேரொளியும், ஜோதிமயமான பெரும் பிரகாசமும் இருப்பதில்லை; எங்கும் அடர்ந்த இருளே நிறைந்திருக்கும், ஐயமும் மயக்கமுமான இருளே நிலைத்திருக்கும், நால்வகை ஆரிய (மேலான) வாய்மைகள் ' உபதேசிக்கப் பெறாமலும், தெளிவாக விளக்கப் பெறாமலும், ஆராயப் பெறாமலும் இருக்கும். " + or முட்டைக்குள் அடங்கிக் கிடப்பதுபோல அறியாமையுள் ஆழ்ந்திருப்பவர்களிலே, அறியாமை என்ற முட்டையின் தோட்டை உடைத்துக்கொண்டு முதலாவது வெளிவந்தவன் நான், உலகிலே நான் ஒருவனே மகோன்னதமான புத்த பதவியைப் பெற்றவன். பிக்குகளே, இவ்வாறு நானே ஜீவர்களில் மூத்தவனாயும் முதன்மையானவனாயும் இருக்கிறேன்." To Tor சூழ்ச்சியும் ஏமாற்றுக் குணமும் இல்லாத புத்தியுள்ள எந்த மனிதனும் என்னிடம் வரட்டும். அவனிடம் நேர்மை மட்டும் இருந்தால் போதும். நான் அவனுக்குப் போதனை செய்கிறேன். அவனுக்கு நான் தருமத்தை விளக்குகிறேன். '

  • புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றவுடன் கூறியவை இவை. " நால்வகை வாய்மைகள் - துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கு அடிப்படையான உண்மைகள். *

58 / புத்தரின் போதனைகள்