வெறுக்கத்தக்க உருவங்களிலும் அவன் வெறுப்படைவதில்லை, ஆனால் கருத்துடைமையில் நிலை பெறுகிறான். அவனுடைய சிந்தனைக்கு எல்லையில்லை. பயனற்ற பொருள்கள் யாவும் யாதொரு மிச்சமுமின்றித் தீர்ந்துபோகும் பரிபாக நிலையான இதயத்தின் விடுதலையை, ஞானத்தால் அடையும் விடுதலையை அவன் அறிவான். அவன் அதிருப்தி, அதிருப்தி இரண்டையும் தள்ளிவிடுகிறான். அவன் உணரும் இன்பகரமான, அல்லது துன்பகரமான, அல்லது இரண்டு மற்ற உணர்ச்சிகளை அவன் வரவேற்பதில்லை, ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை விடாமல் பற்றிக் கொள்வதுமில்லை. அதனால் மயக்கம் தீர்கின்றது. மயக்கம் தீர்வதால் பற்று ஒழிகின்றது. பற்று ஒழிவதால் பவம்(கருமத் தொகுதி) ஒழிகின்றது. துக்கம் அனைத்தும் ஒழிவது இவ்வாறுதான். பிக்குகளே வேட்கையை (அவர அல்லது ஆசையை) அழிப்பதன் மூலம் பெறும் இந்த விடுதலையைப் பற்றி உங்களுக்கு நான் விளக்கமாகக் கூறியுள்ளதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். " or or (கெளசாம்பி நகரில் கங்கையின் வெள்ளத்திலே மிதந்து சென்று கொண்டிருந்த பெரிய மரக்கட்டை ஒன்றைச் சுட்டிக் காட்டிப் புத்தர் பெருமான் சீடர்களுக்குச் செய்த உபதேசம். ) பிக்குகளே! இப்பொழுது ஒரு மரக்கட்டை இந்தக் கரையிலோ அந்தக் கரையிலோ சென்று தங்காமலும், நட்டாற்றில் ஆழ்ந்து விடாமலும், ஒரு திடரில் தட்டி மாட்டிக் கொள்ளாமலும், மானிடர் கைகளிலோ மற்றவர் கைகளிலோஅகப்படாமலும், சுழலில் சிக்கிக் கொள்ளாமலும், (தானாக) உள்ளூர உளுத்துப் போகாமலும் இருந்தால், பிக்குகளே, அந்தக்கட்டை மிதந்து சென்று கடலை அடையும். மெதுவாகக் கடலுக்கே போய்ச் சேரும், கடலை நோக்கியே சென்றுவிடும். ஏன்? ஏனென்றால், பிக்குகளே, கங்கையின் பிரவாகம் கடலுக்கே செல்கின்றது. கடலுக்கே போய்ச் சேருகின்றது. கடலை நோக்கியே செல்கின்றது. பிக்குகளே! அதைப்போலவே, நீங்கள் இந்தக் கரையிலோ அந்தக் கரையிலோ தங்காமலும் நட்டாற்றில் ஆழ்ந்துவிடாமலும், ஒரு திடரில் தட்டி மாட்டிக் கொள்ளாமலும், மானிடர் கைகளிலோ மற்றவர் கைகளிலோ அகப்படாமலும், சுழலில் சிக்கிக் கொள்ளாமலும், நீங்கள் (தாமாக) உள்ளூர உளுத்துப்போகாமலும் இருந்தால், பிக்குகளே நீங்கள் நிருவாணத்தை அடைவீர்கள். நீங்கள் மெதுவாக நிருவாணத்திற்கே போய்ச் சேருவீர்கள், நிருவாணத்தை நோக்கியே நீங்கள் செல்வீர்கள். ஏன்? ஏனென்றால், பிக்குகளே, ஸம்மா திருஷ்டி (நற்காட்சி) மிதந்தே ப. ராமஸ்வாமி | 61
பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/59
Appearance