(பெளத்த தருமம் ஒருதேர், பிறவிக் காட்டினுள் சிக்கி அலையும் மக்களை அந்த இரதம் நிருவாணப் பேற்றுக்கு அழைத்துச் செல்லும். அதைப் பற்றிய விவரம் இது. ) ஞானமடைந்து நம்பிக்கை கொண்டவர் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஏறிச் செல்லும் இரதம் அது. அது நீதி நெறிமுறைகள் என்னும் பலகைகளால் செய்யப் பெற்றது. அதன் ஏர்க்காவலாக விளங்குவது அந்தக்கரணம் அல்லது மனச்சான்று உள்ளமே அதன் நுகத்தடி ஆனந்தமே அதன்.அச்சு சக்தியே அதன் சக்கரங்கள் உள்ள நின்றவும் அமைதியுமே இழுத்துச்செல்லும் குதிரைகள்: கருத்துடைமை கவனமுள்ள சாரதி; அவாவின்மையே இரதத்தின் அலங்காரங்கள்: பற்றற்ற உள்ளத்தில் விளையும் அன்பும் அஹிம்சையுமே பாதுகாப்புக்கான ஆயுதங்கள். பொறுமையே தருமத்தின் கவசம். சாந்தி. நிலையத்தை நாடி இரதம் உருண்டு ஓடுகின்றது. அந்த இரதம் ஒருவர் தாமே தமக்காகச் செய்து கொள்வது - அதற்கு ஈடும் இல்லை, எடுப்பும் இல்லை. அதிலே அமர்ந்துகொண்டு முனிவர்கள் உலகைவிட்டுச் செல்கிறார்கள், உண்மையிலேயே அவர்கள் குறித்த வெற்றியை அடைகிறார்கள். '
ஒ. பிக்குகளே கங்கை, யமுனை,அசிரவதி, சரயு, மாஹி போன்ற பெரு நதிகள் கடலில் கலக்கும்போது தங்கள் பழைய பெயர்களையும், தோன்றிய இடங்களையும், எவ்வாறு இழந்து ஒரே சமுத்திரம் என்று பெயர் பெறுகின்றனவோ, அவ்வாறே கூடித்திரிய, பிராமண, வைசிய, சூத்திரர் என்ற நால் வருணத்தாரும் ததாகதர் உபதேசித்த தருமத்திலும் சீலத்திலும் புகுந்த பின்பு, வீட்டைவிட்டு வீடற்ற வாழ்க்கையை மேற்கொண்டபின்பு, அவர்களுடைய பழைய நாம கோத்திரங்களை இழந்து துறவிகள் என்றே அழைக்கப் பெறுவர். '
ஒ. பிக்குகளே மகா சமுத்திரம் உப்பின் உவர்ப்பை மட்டுமே கொண்டிருப்பதுபோல இந்தத் தருமமும்விடுதலை என்ற ஒரே ருசியைக் கொண்டிருக்கிறது. '
- †
ஒ. பிக்குகளே அமிதமான இரண்டு வழிகள் இருக்கின்றன; உலகப் பற்றை விட்டவன் அவைகளைப் பின்பற்றலாகாது. உணர்ச்சி காரணமாகவும், முக்கியமாகப் புலனுணர்ச்சி காரணமாகவும், விரும்புதற்குரிய பொருள்களால் திருப்தியடையும் இழிவான பாமர வழி ஒரு பக்கத்தில் இருக்கின்றது . அது வழக்கமாக இருந்து வரினும், ப. ராமஸ்வாமி | 83