இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிக்குகளே துறவு வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் பயங்களில் இல்லை. புகழிலும் கெளரவத்திலும் இல்லை. சிலங்களை முறையாகப் போற்றி வருவதில் இல்லை; அறிவும்
உள்ளொளியும் பெறுவதிலும் இல்லை; ஆனால் துறவு வாழ்க்கையின் சாரம் என்பது நிச்சயமான தெய விடுதலையிலேயே உள்ளது . அதுவே குறிக்கோள். '
TA Tr எனது தருமம் பரிசுத்தமானது, மேலோர்தாழ்ந்தோர் என்றும், செல்வோர் ஏழைகள் என்றும் அதற்கு வேற்றுமையில்லை. தண்ணிரைபபோல எனது தருமம் எல்லோரையும் வேற்றுமையின்றிச் சுத்தம் செய்வது. நெருப்பு ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையிலே உள்ள சகல பொருள்களையும் பாகுபாடின்றி எரிப்பதுபோல், எனது தருமமும் உயர்வு தாழ்வு என்ற வேற்றுமையற்றது. எனது தருமம் ஆகாயத்தைப் போன்றது; அதில் அவ்வளவு விசாலாமான இடமிருக்கின்றது. எல்லோரையும் ஆடவர், பெண்டி , சிறுவர். சிறுமியர், வல்லமையுள்ளவர், மெலிந்தவர் யாவயையும் ஏற்றுக்கொள்ள இடமிருக்கின்றது. " ப. ராமஸ்வாமி | 65