உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிக்குகளே, இப்பொழுது கவனியுங்கள் (சேர்க்கையாகச்) சேர்ந்துள்ள பொருள்கள் யாவற்றிலும் (பிரிந்து) அழிவுறும் இயல்பு அடங்கியுள்ளது என்பதை நினைவுறுத்தியே நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். உங்களுடைய விமோசனத்திற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்! "

மனமாசுகள் நீங்கி, எவன் சகல சீலங்களிலும் நிலைத்து நின்று, அடக்கமும் உண்மையும் உள்ளவனோ, அவனே சீவர உடைக்கு உரியவன். '

தர்ப்பைப் புல்லைத் தவறாக இழுத்தால் அது கையை அறுத்து விடுகிறது; அதுபோல், தீயவழியில் பயிலும் துறவறமும் ஒருவனை நரகில் சேர்க்கின்றது. ' Fr ஒ. பிக்கு! இந்த ஓடத்தைக் காலியாக்கு பாரம் குறைந்தால் இது இலகுவாக ஒடும்; விருப்பையும் வெறுப்பையும் சேதித்துவிட்டால், நீ விடுதலைப் பேற்றை அடைவாய். '

பிக்குகளே வஸ்ஸிகைச் செடி வாடிப்போன மலர்களை உதிர்த்து விடுவதுபோல், நீங்களும், விருப்பு வெறுப்புகளைக் கைவிட்டுவிட வேண்டும். '

  • *

உடலில் அமைதி,பேச்சில் அமைதி, உள்ளத்தில் அமைதியுடன், நிதான நிலைபெற்று, உலகின் ஆசைத் தூண்டுதல்களை ஒழித்த பிக்குவே உபசாந்தி பெற்றவன் என்று கூறப்படும். '

இளவயதாயிருப்பினும், புத்த தருமத்தில் மன் மகிழ்ச்சியுடன் ஈடுபடும் பிக்கு, மேகத் திரையிலிருந்து விடுபட்ட வெண்மதி போல, இவ்வுலகில் ஒளியைப் பரப்புகிறான். '

- இந்த உபதேசமே புத்தர் பெருமான் சீடர்களுக்குக் கடைசியாகக் கூறிய உபதேசமாகும். 88 / புத்தரின் போதனைகள்