பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33. பிராமணர்கள் ஒ பிராமணா வீரத்துடன் எதிர்த்து வெள்ளத்தைத் தடுத்துநில்: ஆசைகளை விரட்டிவிடு. படைக்கப்பட்ட எல்லாம் அழிவடையும் என்பதை உணர்ந்தபிறகு, படைக்கப் பெறாததை நீ அறிவாய்! " Wr or எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகள் அற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ, கடமைகளைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்றவனோ, எவன் உத்தமமான ஞானியின் முடிவான நிலையை அடைந்தவனோ, அவனையே நான் பிராமணன் என்று அழைப்பேன். ' 青青 மெய், வாய், மனம் ஆகிய மூன்றினாலும் பிறருக்குத் துன்பம் செய்யாது. இம்மூன்றிலும் அடக்கமுள்ளவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்! " + k, ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால் அன்று தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான்; அவனே பிராமணன் ' + or தாமரை இலைமேல் தண்ணிர் போலவும், ஊசிமுனைமேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். ' Ar kt. இகத்திலும், பரத்திலும் எதிலும் ஆசையற்றவன், எதிலும் நாட்டமற்றவன், தளைகளற்றவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்: ' † To மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த பிராமணர்கள் சொல்வது இதுதான்: 'எங்களுக்குத் தெரியாத, நாங்கள் பார்த்திராத ஒன்றை அடைவதற்கு நாங்கள் வழிகாட்ட முடியும், 'இதுதான் நேர்பாதை, இதன்படி செல்பவன் பிரும்த்தோடு ஐக்கியமாவதற்கு இதுவே நேரான மார்க்கம்' என்று நாங்கள் கூற முடியும்... '

  • புத்தர் காலத்தில் மூன்று வேதங்களுக்குள்ளேயே நான்காவதான அதர்வண் வேதமும் சேர்ந்திருந்தது; வேதங்களை மூன்றாகவும், நான்காகவும் குறிப்பிடுவதுண்டு.

72 | புத்தரின் போதனைகள்