உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. இரண்டு வருஷா காலங்கள் முடிய இந்த விதிகளில் ஆறு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து வந்த பிக்குனி பயிற்சி முடிந்து, இரு பாலாரும் சேர்ந்துள்ள சங்கத்திடம் பிக்குனிக்குரிய முழு அந்தஸ்தையும் பெறலாம். 7. எக்காரணத்தையிட்டும் பிக்குணி, ஒரு பிக்குவை ஏசவோ, கண்டிக்கவோ கூடாது. 8. பிக்குணி பிக்குகளிடம் பேசுதல் கூடாது. ஆனால் அவர்கள் அவளிடம் பேசலாம். " לו לו பெண் வயது முதிர்ந்தவளாயிருந்தால், அவளை உங்கள் தாயாகப் பாவிக்கவும், இளமையாயிருந்தால், உங்கள் சகோதரியாகப் பாவிக்கவும் மிகவும், சிறுமியாயிருந்தால், உங்கள் குழந்தையாகப் பாவிக்கவும்.

ஆடவர்களின் காமம் கொடுரமானது, அதைக் கண்டு அஞ்ச வேண்டும்; ஆதலால் இடைவிடா முயற்சி என்னும் வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு, ஞானம் என்னும் கூரிய அம்புகளைத் (தயாராகத்) தொடுத்து வைக்கவும். 78 புத்தரின் போதனைகள்