நற்கடைப்பிடி பிக்குகளே! இதிலே ஒரு பிக்கு, உடல் (கந்தங்களாலாகிய) கலப்பு என்று கருதி, ஊக்கத்துடனும், நிலைத்த சிந்தையுடனும், உலகிலுள்ள பேராசையையும் அயர்வையும் அடக்குவதன் மூலம் சாந்தி பெற்றும் வசித்திருக்கிறான். (உடலைப் போலவே) உணர்ச்சி சம்பந்தமாயும், புலன்களின் அறிவு (இந்திரிய ஞானம்) சம்பந்தமாயும், செய்கைகள் சம்பந்தமாயும் ... மனத்தின் சிந்தனைகள் சம்பந்தமாயும் (அவன் அடக்க வேண்டியவைகளை) அடக்கி வாழ்ந்து வருவான். பிக்குகளே, இதுவே நற்கடைப்பிடி எனப்படும்! நல்லமைதி: பிக்குகளே இதிலே ஒரு பிக்கு, புலன்களின் ஆசைகளிலிருந்து ஒதுங்கி,தீய நிலைகளிலிருந்தும் ஒதுங்கி, குறித்த ஒரு பொருளைச் சார்ந்து நிலைத்த சிந்தனையுடன் முதலாவது தியானத்தில் பிரவேசிக்கிறான். இது ஏகாந்த வாசத்தில் தோன்றும், ஆர்வமும் ஆனந்தமும் நிறைந்தது. பிறகு, நிலைத்த சிந்தனையையும் நீக்கிவிட்டு, அவன் இரண்டாவது தியானத்தில் பிரவேசிக்கிறான்; அது (அந்நிலை) உள்ளமைதியாகும். மன உறுதியை மேலும் வலுப்படுத்துவதுமாகும். அதிலே நிலைத்த சிந்தனையில்லை. சித்தத்தை ஒருநிலைப்படுத்துவதில் அது தோன்றுவது, ஆர்வமும் ஆனந்தமும் நிறைந்தது. பிக்குகளே! பின்னர்.ஆர்வமும் தேய்ந்து மறைவதால், அவன் சமநிலை (அதாவது சமசித்தத்துவம் என்ற உபேட்சை நிலை) பெறுகிறான். அவன் சிரத்தையுடனும் மனநிறைவுடனும் இருக்கிறான்; அவன் உடலோடு இருக்கும்போதே ஆனந்த நிலையை அடைகிறான். அந்நிலையையே ஆரியர்கள் (மேலோர்கள்) இராகத் துவேஷங்களற்ற ஏகாக்ரக சிந்தனையுடைய மனிதன் ஆழ்ந்த நிலையில் வாழ்கிறான்' என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவன் மூன்றாவது தியானத்தில் பிரவேசித்து, அதிலேயே நிலைத்திருக்கிறான். பிக்குகளே பின்னர், இன்பத்தையும் துன்பத்தையும் துறந்து, அவன் முன் பெற்றிருந்த ஆனந்தத்தையும் சோகத்தையும் நீத்து, நான்காவது தியானத்தில் பிரவேசித்து, அதிலேயே அவன் நிலைத்திருக்கிறான்; அந்நிலை இன்ப துன்பங்கள், ஆனந்தம் ஆகியவை அற்ற நிலை - சமநிலையும், நிறைவும் கொண்ட பரிசுத்தநிலை. இதுவே நல்லமைதி எனப்படும். ' வைராக்கியம் - ஆசைகளை வெறுத்து ஒதுக்கல், வெறுப்பு. "ஞானக்கண் - உண்மையை ஊடுருவிப் பார்க்கும் சக்தி, ப. ராமஸ்வாமி | 79
பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/77
Appearance