பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மார்க்கங்களில் அஷ்டாங்க மார்க்கமே சிறந்தது. வாய்மையில் நான்கு வாய்மைகளே சிறந்தவை; சீலங்களில் வைராக்கியமே சிறந்தது; மக்களில் ஞானக்கண்' உடையவனே சிறந்தவன். ' 38. பன்னிரு நிதானங்கள் பிறவி ஏற்படக் காரணமாகிய விதிகளைப்பற்றி விவாதம் செய்யக் கூடிய அறிவாளர் அநேகர் இங்கே இருக்கின்றனர்; ஆனால் பிறப்பை நிறுத்தும் வழியை அறிந்தவர் ஒருவர்கூட இல்லை. " + or நான் அடைந்த தருமம் ஆழ்ந்த பொருளுடையது, பார்வைக்கு அரியது. உணர்ந்து கொள்வதற்கு அரியது, நேர்த்தியானது, முதன்மையானது (சாதாரணச்) சிந்தனைக்கு அப்பாற்பட்டது, நுட்பமானது, ஞானிகளால் மட்டுமே உய்த்துணரத்தக்கது. ஆனால் மக்களுடைய இந்த உலகம் தான் பற்றுக்கொண்டதைவிடாது பிடித்துக் கொள்கின்றது. தான்பற்றுக்கொண்டதில் இன்பமடைகின்றது. சார்புகள் காரணமாகப் பொருள்கள் உற்பத்தியாவதைப் பதிச்ச - சமுப்பாதம் என்ற பெளத்த தருமம் கூறும். சார்புகள் என்பவை நிதானங்கள் அல்லது காரணங்கள் அவை பன்னிரண்டு: 1. பேதைமை - (அவித்தை ignorance) 2. Qαύω4. - (avubgiv&mwri/&«ir- thought ideations) 3. உணர்ச்சி - (விஞ்ஞானம் - cognitions) 4. அருவுரு - (நாமரூபங்கள் - name and form) 5, Guruold) - (or Lituottilagir - six organs of sense) 6. carg) - (ciouflaub - contact) 7. 9&soël - (Goughost - feelings or emotions) 8. வேட்கை- (திருஷ்ணை - crawing) 9. Lig) - (n-ungsromb - attachment) 10. கருமத்தொகுதி - (பவம் - accumulated karma) 11. தோற்றம் - (பிறப்பு - re-birth) 12. estememiliuugn - (uofførib - old age, death ect.) பேதைமையிலிருந்து செய்கையும், செய்கையிலிருந்து உணர்ச்சியும், இவ்வாறே ஒன்றைக் காரணமாகக் கொண்டு அடுத்ததும் தோன்றும். எனவே பிறப்புக்கு மூலகாரணம் பேதைமை. 80 | புத்தரின் போதனைகள்