பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தான் பற்றுக்கொண்டதில் திளைத்து நிற்கின்றது. இந்த உலகம் இவ்வாறு (பொருள்களைப்) பற்றிக் கொள்வதால், சார்புகள்" காரணமாகவே பொருள்கள் உற்பத்தியாகின்றன என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது கஷ்டமாயுள்ளது. செயல்கள் யாவும் ஒடுக்கிய நிலையை அடைய் முடியும் என்பதையும், பிறவிக்குக் காரணமான அடிப்படைகள் யாவற்றையும் ஒதுக்கிவிட முடியும் என்பதையும், வேட்கையை அழித்தல், உணர்ச்சிகளை அடக்கல், சிந்தையை அடக்கியே சும்மா இருத்தல் ஆகியவையே நிருவாணம் என்பதையும் மக்கள் புரிந்து கொள்வது கஷ்டமேயாகும். " ייד rך இப்பொழுது எது இருப்பதால் அழிவும் மரணமும் ஏற்படுகின்றன? அழிவுக்கும் மரணத்திற்கும் காரணமாயுள்ளது எது? எங்கே பிறப்பு உளதோ, அங்கே அழிவும் மரணமும் இருக்கின்றன: அழிவும் மரணமும் பிறப்பினால் நிர்ணயிக்கப்படுகின்றன. எது இல்லாமலிருந்தால், பிறப்பு, தோற்றம், பற்று வேட்கை, நுகர்ச்சி, ஊறு, ஆறுவகைப் புலன்கள் (நாம ரூபமாகிய) மனமும் உடலும் ஏற்படுகின்றன? மன - உடலை நிர்ணயிக்கும் காரணம் எது? உணர்ச்சி (விஞ்ஞானம்) எங்கே உளதோ, அங்கே மன உடலும் உண்டு; மன - உடலின் தோற்றத்திற்கு உணர்ச்சியே காரணம். இப்பொழுது எது இருப்பதால், உணர்ச்சி இருக்கின்றது? உணர்ச்சிக்கு காரணமானது எது? மன - உடல் எங்கு இருக்கின்றதோ, அங்கே உணர்ச்சியும் உளது:மன - உடலே உணர்ச்சியை நிர்ணயிக்கின்றது. இந்த உணர்ச்சி மன-உடலிலிருந்து திரும்புகின்றது. அதற்கு அப்பால் அது செல்வதில்லை. இந்த அளவுக்கு ஒருவன் பிறக்கலாம், அழியலாம் அல்லது மரிக்கலாம், அல்லது ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறலாம். அதாவது மன - உடல் காரணமாக உணர்ச்சி அமைகின்றது: உணர்ச்சி காரணமாக மன-உடல் அமைகின்றது. மன. உடல் காரணமாக ஆறு வகை வாயில்களும் அமைகின்றன, ஆறு வகை வாயில்கள் காரணமாக ஊறு (ஸ்பரிசம்) முதலியவையும் அமைகின்றன. பிக்குகளே துக்கம் யாவும் தோன்றுவது இவ்வாறுதான். எங்கே மறுபிறப்பு இல்லையோ, அங்கே அழிவும் மரணமும் இல்லை. மறுபிறப்பு நின்றதும், அழிவும் மரணமும் நின்று விடுகின்றன. உணர்ச்சி இல்லாத நிலையில் மன - உடலும் இல்லை; உணர்ச்சி நின்றதும், மன - உடலும் நின்றுவிடுகின்றது. ப. ராமஸ்வாமி | 81