பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39. ஆன்மா பிக்குகளே உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே, உடல் ஆன்மாவாயிருந்தால், இந்த உடல் நோய்க்கு உட்படாது உடல் சம்பந்தமாக, 'என் உடல் இப்படியிருக்கட்டும், என் உடல் அப்படியிருக்கட்டும் என்று சொல்லக் கூடியதாக இருக்கும். பிக்குகளே, உடல் ஆன்மாவற்றதாக இருப்பதாலேயே உடல் நோய்க்கு உள்ளாகின்றது. 'என் உடல் இப்படியிருக்கட்டும், என் உடல் அப்படியிருக்கட்டும் என்று சொல்ல முடியவில்லை."

ஆதலால் பிக்குகளே, இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய எந்தக் காலத்திலும் உள்ள எந்த உடலையும் உணர்ந்து கொண்டவன் - அதன் தோற்றத்தைக் கொண்டோ, அதன் தூல உருவைக்கொண்டோ, சூக்கும உருவைக்கொண்டோ, அது தாழ்ந்திருந்தாலும், உயர்ந்திருந்தாலும், அது அருகிலிருந்தாலும், தொலைவிலிருந்தாலும், அது முறையாகவும் சரியாகவும் உணர்ந்து கொண்டவன், இந்த உடலெல்லாம் என்னுடையதன்று. இது நான் அன்று ஆன்மா என்னுடையது அன்று என்று கருதவேண்டும்."

'படைக்கப் பெற்ற யாவும் அநித்தியம் - நிலையற்றவை - இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அமுங்குவதில்லை. இதுவே விசுத்தி (பரிசுத்தமான) மார்க்கம். ' ੋਂ 'படைக்கப்பெற்ற யாவும் துக்கமயமானவை . இதை அறிவால் உணர்ந்தவன்துக்கத்தில் அழுங்குவதில்லை: இகவே விசுத்தி மார்க்கம்.' -. 'படைக்கப் பெற்ற யாவும் அநாத்மம்" இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதன் விசுத்தி மார்க்கம். '

மனிதன் பல பொருள்களின் சேர்க்கையாக விளங்குவோன்.அல்லவா? கந்தங்கள் என்று நம் முனிவர்கள் கூறும் பல தாதுக்களின் சேர்க்கையாகவே நாம் இருக்கிறோம் அல்லவா? மனிதன் துல "அநாத்மம்-ஆன்மா இல்லாதவை:உலகில் எல்லாம்.அநித்தம், துக்கம், அநாத்மம் என்பது பெளத்த தருமத்தின் அடிப்படைக் கொள்கை. ஒவ்வொரு மனிதனுக்கும். ஜந்துவுக்கும் அழிவில்லாத தனி ஆன்மா ஒன்று இல்லை என்பதே அநாத்மம்' என்பதன் பொருள். - 88 / புத்தரின் போதனைகள்