40. உடல் இந்த உடலாகிய வர்ணம் தீட்டிய பொம்மையைப் பார் இது புண்கள் நிறைந்தது, (எலும்புகளாலும் சதையாலும்) ஒன்றாகக் கோத்து வைக்கப் பட்டது, நோய்க்கு இடமானது, பல எண்ணங்கள் நிறைந்துள்ளது, ஆனால் நிலையில்லாதது!
இந்த உடல் நலிந்து தேய்வது, இது நோய்களின் கூடு, மிகவும் நொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப்போகும்; வாழ்வின் முடிவு சாவுதான். '
உலகப் பற்றுள்ளவன்தன் உடலை வளர்க்கிறான். ஆனால் ஞானி தன் சித்தத்தை வளர்க்கிறான். தன் ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே ஈடுபட்டிருப்பவன் தன் அழிவைத் தேடிக் கொள்கிறான்; ஆனால் தரும நெறியில் நடப்பவன் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதுடன், நீடிய வாழ்வையும் பெறுகிறான். '
உடல் வலியை இழந்தவன் உண்மை ஞானத்தைப் பெற முடியாது. பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் வாடிய ஒருவன் மனநிலை குலைந்து பின் சாந்தியோடிருக்க முடியாது; பூரணமான அமைதியைப் பெற்றாலன்றி, மனத்தினாலேயே அடைய வேண்டியதாயுள்ள முடிவை அவன் எப்படி அடையமுடியும்? புலன்களை இடைவிடாமல் திருப்தி செய்யத்தான் வேண்டியிருக்கிறது; அவைகளை அமைதியாக வைத்துக் கொண்டாலே சித்தமும் தன் நிலையில் நிற்கும். அமைதியுற்ற மனமே தியானத்திற்கு ஏற்றது; தியானத்தின் மூலமே அடைவதற்கு அரிய, அழிவற்ற, நிலையான சாந்தியை அடைய முடியும்.
அந்தோ! வெகு சீக்கிரத்தில் இந்த உடல் தரை மீது சாய்ந்து கிடக்கும். (எல்லோராலும்) புறக்கணிக்கப்பட்டு, பிரக்ஞையில்லாமல், பயனற்ற மரக்கட்டைபோல், இது கிடக்கும்' 88 / புத்தரின் போதனைகள்