பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41. மரணம் உறக்கத்தில் ஆழ்ந்துள்ள வியாமத்தைப் பெரிய வெள்ளம் அடித்துக்கொண்டு போகிறது; அதுபோல், மனிதன் (வாழ்க்கையில் இன்பங்களாகிய) மலர்களைப் பறித்து கொண்டு அதிலே ஈடுபட்டிருக்கும்போதே, மரணம் அவனை அடித்து கொண்டு போய்விடுகிறது. '

  • A

மனிதன் (இன்ப) மலர்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போது, அவன் இன்பங்களில் திருப்தியடையுமுன், மனம் கலக்கமுற்றிருக்கும் போதே, மரணம் அவனை வென்றுவிடுகிறது.

மனிதன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது தப்பித்துக் கொள்ளும் இடம் பரந்த வானத்திலும் இல்லை. ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை.

எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்ற மக்கள் காக்க முடியாது; தந்தையும் தமர்களும் காக்க முடியாது உற்றாரை நம்பியும் பயனில்லை. '

இந்த உலகத்தில் அநித்தியமான மனிதர்களுடைய வாழ்வு துன்பமும் வேதனையும் கலந்து அற்பகாலமே பிறந்தவர்கள் (யாவரும்) மரணத்தை விலக்குவதற்கு எவ்வித வழியுமில்லை; முதுமையடைந்ததும் மரணமே ஏற்படுகின்றது. உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திற்கும் இதுவே இயல்பாகும்."

கனிவுற்ற கனிகள் விரைவிலே கீழே விடலாம். அதுபோல், பிறவியெடுத்துள்ள மனிதர்கள் எந்த நேயத்திலும் மரணமடைந்து விடக்கூடும்." A di நரகர்களாகிய மனிதர்கள் ஒவ்வொருவராகத் துக்கிச் செல்லப்படுகின்றனர். பந்துக்கள் பார்த்துத் துக்கித்து அரற்றிக் கொண்டிருக்கும்போதே அவர்கள், கொலைக்களத்திற்கு எருதை அழைத்துச் செல்வதுபோல், அழைத்துச் செல்லப்படுகின்றனர், இதைக் கவனிக்கவும்! " ப. ராமஸ்வாமி | 89