உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. கரும நியதி ஒ. பிக்குகளே இச்சா சக்தியை உபயோகித்தலையே (vollion) நான் கருமம் என்று அழைக்கிறேன்."

  1. *

மனிதன் தன் பாவ கருமத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக் கொள்ளும் இடம் பரந்த வானத்திலும் இல்லை; ஆழ்ந்த கடலிலும் இல்லை; மலையின் குகைகளிலும் இல்லை. '

மாலுவக் கொடி கடம்ப மரத்தைச் சுற்றிப்படர்ந்து மரத்தையே அமுக்கிவிடுவதுபோல், ஒருவனுடைய தீவினையே அவனை அமுக்கிவிடுகிறது: பகைவர் செய்ய விரும்பும் தீமையை அவன் தானாகவே செய்துகொள்கிறான். ' ++ இரும்பிலிருந்தே துரு தோன்றினும், அதை அது அரித்துவிடுகிறது: அதுபோலவே (அறநெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களை தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன.' + or பிராணிகள் யாவும், முன் ஜன்மங்களிலும், இந்த ஜன்மத்திலும், செய்யும் செயல்களின் கருமப் பயனாலேயே இப்போதுள்ள நிலையில் இருக்கின்றன.' + + பிக்குகளே மனப்பூர்வமாக (வேண்டுமென்றே) செய்யப்பெற்ற சகல கருமங்களையும் அழித்து விடவே முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்கிறேன். அப்படி அழித்தல் என்பது, இந்தப் பிறப்பிலோ, வேறு பிந்திய பிறப்பிலோ, உரிய சந்தர்ப்பத்திலேயே (கருமப் பயனை அநுபவிப்பதன் மூலம்) சாத்தியமாகும். " or of இயற்கையிலுள்ள மற்றப் பொருள்களைப் போலவே மனிதனின் வாழ்க்கையும் காரண-காரிய விதிக்கு உட்பட்டதாகும். இறந்த காலத்தில் விதைத்ததை இப்போது அறுவடை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் விளைவது இப்போது விதைப்பதேயாகும். '

புத்தரின் போதனைகள்