இந்த உடல் அசுத்தம் நிறைந்ததுதான்.இதன் முடிவு மயானந்தான், ஏனெனில் இது நிலையற்றது. மறுபடி இது தன் மூலப் பொருள்களாகிய கந்தங்களாகப் பிரிந்து விடுவதே விதியாகும். ஆயினும் வினைப் பயனைத் துய்ப்பதற்கு இதுவே களனாக விளங்குவதால், பாவத்தின் கருவியாக இல்லாமல், இதைத் தருமத்தின்கருவியாகச் செய்துகொள்ளும் சக்தி உன்னிடம் உளது. உடல் இன்பங்களில் திளைத்திருத்தல் நன்மையன்று. ஆனால் உடலின் தேவைகளைப் புறக்கணித்து, அசுத்தத்தின் மேலே குப்பையைக் கொட்டுவதுபோலே, நடந்து கொள்வதும் நன்மையன்று. சுத்தம் செய்யாமலும், எண்ணெய் ஊற்றாமலுமுள்ள விளக்கு அணைந்துவிடும்;அதுபோல் சுத்தம் செய்து பராமரிக்கப்படாமலும், (கடுமையான) தவத்தினாலும் நலிவுற்ற உடல் உண்மையின் ஒளியை ஏற்றுக்கொள்ளத் தகுதியான பாத்திரமாக விளங்காது. *
கரும விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ' ப. ராமஸ்வாமி | 91