புறத் தோற்றங்களான யாவும் ஒழிந்த பிறகு தான் ஒரே உயிர்த்தத்துவம் மட்டும் எஞ்சி நிற்கின்றது. அது பிரபஞ்ச இயல்புகளுக்கு அப்பாற்பட்டுச் சுதந்திரமாயுள்ளது. விறகு நீர்ந்த பிறகும், சுடர் அணைந்த பிறகும், நித்தியமான ஒளியில் எரிந்து கொண்டிருக்கும் . அதுதான்; ஏனெனில் அந்தத் தீ சுடரிலுமில்லை, விறகிலுமில்லை. அந்த இரண்டின் உட்புறத்திலுமில்லை; ஆனால் மேலேயும், கீழேயும் எங்கும் உள்ளது அது.
நிலமும் நீரும் இல்லாத, ஒளியும், காற்றும் இல்லாத, எல்லையற்ற ஆகாயமும் (இடமும்) பிரஞ்ஞை உணர்வு இல்லாத, வெறுமையும் (சூனியமும்) இல்லாத அறிதலும், அறிதலற்றதும் இல்லாத இந்த உலகம் அந்த உலகம் என்று இல்லாத, சூரியன் சந்திரன் இரண்டும் இல்லாத ஒர் இடம் இருக்கின்றது. அதை வருதலும் போதலுமற்றது என்றும், நிற்றல், இயங்குதல், ஓய்வுறுதல், மரித்தல், பிறத்தல் ஆகிய எந்நிலையுமற்றது என்றும் நான் கூறுகிறேன். அதற்கு நிலையுமில்லை, சலனமுமில்லை, ஆதரவுமில்லை. அதுவே துக்கத்தின் முடிவு. '
ஓ. பிக்குகளே பிறப்பற்ற, ஆரம்பமற்ற, விருஷ்டிக்கப்படாத, உருவாகாத ஒன்று இருக்கிறது. அப்படி ஒன்றில்லையானால், பிறப்புள்ள, ஆரம்பமுள்ள சிருஷ்டிக்கப்பட்ட உருவுள்ள உலகிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாமற் போகும். '
- *
எந்த மனிதன் நான் என்ற தனித்தன்மையை ஒழிக்கும் வகையில் தன் 'இதயத்தைச் செலுத்துகிறானோ, அவன், கங்கையின் பெருவெள்ளத்தில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு அபாயமின்றி நீந்திச் செல்லும் பலவானைப்போல், இன்பமாயும், களிப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பான். ' - முற்றும் - ப. ராமஸ்வாமி 93