பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அநுபந்தம் பெளத்தத் திருமுறைகள் பாலி மொழியிலுள்ள பெளத்தத் திருமுறைகளுக்குத் திரிபிடகங்கள் என்று பெயர். பிடகம் என்றால் கூடை, திரி என்றால் மூன்று. எனவே மூன்று கூடைகளில் அவை நிறைந்துள்ளன. திரி பிடகங்களாவன: சுத்த பிடகம், விநய பிடகம், அபிதரும பிடகம். சுத்த பிடகம்: இது தீக நிகாயம், மஜ்ஜிம நிகாயம், சம்யுத்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குத்தக நிகாயம் என ஐந்து நிகாயங்கள் அல்லது தொகுதிகளைக் கொண்டது. தீக நிகாயத்தில் 3 வக்கங்களும், மஜ்ஜிம நிகாயத்தில் 15 வக்கங்களும், சம்யுத்த நிகாயத்தில் 5 வக்கங்களும், அங்குத்தர நிகாயத்தில் 11 நிபாதங்களும் உள்ளன. குத்தக நிகாயம் 15 சிறு நூல்களைக் கொண்டது. அந்நூல்கள் வருமாறு: குத்தக பாடம் தம்மபதம் உதாநம் இதிவுத்தகம் சுத்தநிபாதம் விமானவத்து பேதவத்து தேரகாதை தேரிகாதை ஜாதகம் நிக்தேசம் படிஸம்தாமக்கம் அவதானம் புத்தவம்சம் சரியாபிடகம் விநய பிடகம்: இது பிக்குகள் பிக்குணிகளுடைய ஒழுக்கங்களுக்குரிய விதிகளைத் தொகுத்துக்கூறுவது. இதன் மூன்று பகுதிகள் சுத்தவிபங்கம், கந்தகை, பரிவாரம். அபிதரும பிடகம்: சுத்த பிடகத்தில் கூறப்பெற்றுள்ளதருமத்திற்கு இது விளக்கமாக அமைந்துள்ளது. இதன் ஏழு பகுதிகளாவன: 일 5