பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.அடைவுற[1]க் கூரை வேயா
அகத்தினில் மழைகொட் டல்போல்
அடைவுற[2]ப் பண்ப டாத
அகத்தினில் அவாக்கள் ஈண்டும்,[3]
நடைமுறை யில்கொள் ளாமல்
நன்மறை ஓதல் மட்டும்
உடையவர், சுரையை ஏட்டில்
உண்டவர்[4] போன்றோ ராவர்.

5


2. விழிப்பு இயல்


ஓங்கலில்[5] நிற்போன் கீழே
உலவுவோர் தமைக்கா ணல்போல்,
ஓங்குமெய் யறிவாம் வல்ல
உயர்மலை வீற்றி ருப்போன்,
தூங்கியே மிகவும் சோம்பும்
தூங்குமூஞ் சிகளைக் கண்டு
வீங்கவும் இரங்கித் தன்னை
விழிப்பொடு காத்துக் கொள்வான்.

6


உழைப்பிலாப் பரியை முந்தி
ஊக்கமார் பரிவெல் லல்போல்,
விழிப்புடன் ஊக்கம் கொள்வோர்
வீணரை வெற்றி கொள்வர்
விழிப்பினில் மகிழ்வும் சோம்பில்
வெருட்சியும் காண வல்லார்,
அழிப்புசெய் நெருப்பைப் போல
அவாத்தளை[6] எரிப்பர் சுட்டே.

7
3
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
  5. 14
  6. 15