பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3. அடக்க இயல்

உள்ளமோர் உறுதி இன்றி
ஓடிடும் அங்கும் இங்கும்;
தள்ளரு[1] பகையின் தீமை
தந்திடும் அடக்கா விட்டால்,
வில்லினை நிமிர்த்தித் தாங்கும்
வேடனின் செயலைப் போல,
மெள்ளமாய் அடக்கிக் காத்து
மீட்டிடல் நன்மையாகும்.

8


அரித்திடும் உள்ளம் ஓய
அடக்கிடோ மாயின், தீயில்
எரித்ததோர் விறகைப் போல
எதற்குமே பயன்ப டாது.
புரத்தலார் பெற்றோர் சுற்றம்
புரிந்திடும் நலத்தின் மேலாய்
வரித்திடும்[2] உளவ டக்கம்
வழங்கிடும் நன்மை யெல்லாம்.

9


4. மலர்கள் இயல்

பூவிலே மணத்தி னோடு
பொலிவெதும் போகா வண்ணம்
மேவியே தேனு றிஞ்சும்
மிகுதிறல் வண்டே போல,
யாவரும் வருந்தா வாறு
யாண்டுமே நன்மை நாடல்
தாவரு[3] கொள்கை யாகும்;
தரையுளோர் இங்ஙன் செய்க.

10
4
  1. 16
  2. 17
  3. 18