பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கையினில் புண்ணில் லாதான்
கடுவையும் தொடலாம் நன்கு;
கையினில் பொருளில் லாதான்
கள்வருக் கஞ்சல் வேண்டா;
பொய்மைசேர் தீமை செய்யான்
பொன்றுதல்[1] என்றும் இல்லை,
மெய்மையே பற்று வோனை
மேவிடும் நன்மை எல்லாம்.

26


காற்றெதிர் புழுதி தூவின்,
கடுகி[2]யப் புழுதி தன்னைத்
துாற்றிய வனையே சேர்ந்து
துன்புறச் செய்தல் போல.
ஆற்றவும் பிறர்க்குத் தீமை
ஆற்றிடின், அந்தத் தீமை
ஆற்றிய வனையே பற்றி
அல்லலில் சிக்கச் செய்யும்.

27



10. ஒறுப்பு இயல்


ஆயனும் மாட்டைக் கோலால்
அடித்தடித் தோட்டல் போல,
தீயவை, செய்தோன் தன்னைத்
தீயவே துய்க்க ஒட்டும்.[3]
தீயினில் வீழ்ந்த பின்னர்த்
தீயினுக் கஞ்சல் ஆமோ?
தீயவை செய்த பின்பு
தீமையின் தப்பல் இல்லை.

28

10

  1. 34
  2. 35
  3. 36