பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வேடரும் எய்தற் கேற்ப
வில்லினை வளைத்துக் கொள்வர்;
நீடிய வயலுக் கேற்ப
நீரினை உழவர் கொள்வர்;
நாடிடும் வடிவு[1]க் கேற்ற
நன்மரம் தச்சர் கொள்வர்;
கூடிடும் சூழற் கேற்ற
குறியினைக் கொள்ளல் வேண்டும்.

29


11. முதுமை நிலை இயல்

வண்ணமேல் தீட்டிச் செய்து
வயங்கிடும் பொம்மை காயம்;
புண்ணொடு பற்பல் நோய்கள்
பொருந்திய திந்தக் கூடாம்;
எண்ணரு அவாவாம் குப்பை
இருந்திடும் அழுக்கு மேடாம்
நிண்ணிடத் தூய்மை மாண்பு
நலமொடு காத்தல் வேண்டும்.

30


என்பினால் கட்டப் பட்ட
இவ்வுடற் கோட்டை மேலே
வன்பிலாத் தசையும் மூடி
வயங்கிடும் போலி யாக.
துன்பமார் பிணியும் மூப்பும்
தூய்மையில் தீய நோக்கும்
வன்பொடு[2] குடியி ராமல்
வல்லையே காலி செய்க.

31
11
  1. 37
  2. 38