பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெற்றியோ பகையை மேலும்
வீறொடு வளரச் செய்யும்
உற்றிடும் தோல்வி தானும்
உறுதுயர் உறுத்து விக்கும்[1]
வெற்றியோ தோல்வி தானோ
விளைத்திடா தியல்பாய் வாழ்வோர்
வெற்றியே பெற்றோ ராவர்;
விதைத்திடார் துன்ப வித்தை[2].

47


உற்றிடும் அவாவை ஒத்த
உறுநெருப் பேதும் இல்லை.
முற்றிடும் பகையை ஒத்த
முட்புதர் யாதும் இல்லை.
பற்றிடும் பிணிமூப் பொத்த
பகைப்பொருள் ஒன்றும் இல்லை.
வற்றிடா மகிழ்ச்சி வாழ்வை
வழங்கிடும் அமைதி உள்ளம்.

48


பேரவா தன்னின் மிக்க
பெரியநோய் ஒன்றும் இல்லை.
ஊறிய மூடக் கொள்கை
உறச்செயும் பெரிய கேடு,
நேரிய உண்மைப் போக்கே
நிலைத்திடச் செய்யும் வாழ்வை.
ஆரிவை உணர்கின் றாரோ
அவருளம் இன்பக் கோட்டை.

49
17
  1. 52
  2. 53