பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


17. சின இயல்
உறுவழி தவறி ஓடும்
ஊர்தியை நிறுத்தாப் பாகன்
வெறுமையாய்க் கடிவா ளத்தை
விதிர்த்தலால் பயனே இல்லை
வெருவரும்[1] சினத்தைக் கொட்டி
வீண்வழி செலும்உள் ளத்தை
அறிவொடு மடக்கி மீட்போர்
அறிஞருள் அறிஞர் ஆவர்.

56


அன்பினால் சினத்தை வெல்க;
அறத்தினால் மறத்தை வெல்க;
நண்பினால் பகையை வெல்க;
நல்கலால் வறுமை வெல்க:
இன்பினால் துன்பம் வெல்க;
என்றுமே வற்றா மெய்மைப்
பண்பினால் பொய்மை வெல்க;
பாருளோர் போற்ற வாழ்க

57


தனதுவாய் பேசா தோனைத்
தருக்கி[2]யென் றுரைப்பர் மக்கள்;
தனதுவாய் மிகவும் பேசும்
தன்மைவா யாடல் என்பர்;
தனதுவாய் அளவாய்ப் பேசின்
தான்பெருஞ் சூதன் என்பர்,
தனதுரை சூழற் கேற்பத்
தருதலே தக்க தாகும்

5820
  1. 58
  2. 59