பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்பெரு வெள்ளி சார்ந்த
களிம்பினை அக ற்றல் போல,
உரம்பெறு உளத்தின் மாசை
ஒல்லை[1]யில் ஒழித்தல் வேண்டும்,
இரும்பினில் தோன்றி அந்த
இரும்பையே துருதின் னல்போல்,
தரும்படர் நாமே செய்த .
தகாச் செயல் நமக்குச் சால.

62


படிக்கிலோ மாயின் நல்ல
பழமறை[2] மதிப்பி ழக்கும் ;
அடிக்கடி பழுது பார்க்கின்
அகமது கெடுதல் இல்லை ;
திடுக்கிடத் திருட்டுப் போகும்
திருமனை காவா விட்டால் ;
மடிக்குநாம் அடிமை யாயின்
மாண்புறு செயல்கள் செய்யோம்,

63


நெஞ்சினில் இரக்கம், நாணம்,
நேர்மைதான் இல்லா தோர்க்கும்—
வஞ்சனை, பொய்பு ரட்டு,
வழிப்பறி, சூது, யார்க்கும்
அஞ்சுதல், இன்மை, காமம்,
ஆயவை[3] மிக்குள் ளோர்க்கும்—
மிஞ்சுமீவ் வுலக வாழ்வு
மிகமிக எளிதாய்த் தோன்றும்.

64



22

  1. 62
  2. 63
  3. 64