பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நெஞ்சினிரில் இரக்கம், நாணம்,
நேர்மையோ டொழுக்கம், தூய்மை,
அஞ்சிடும் அடக்கம், மெய்மை,
அமைதியோ டன்பு, பண்பு,
விஞ்சிடும்[1] அவாவே இன்மை,
விளம்பிய இவையுள் ளோர்க்கு
மிஞ்சுமிவ் வுலக வாழ்க்கை
மிகுகடி னமாகத் தோன்றும்.

65


பிறரது வாழ்வைக் கண்டு
பெரியதோர் பொறாமை கொள்வோன்
இரவொடு பகலும் தூங்கான்:
இம்மியும்[2] அமைதி கொள்ளான்.
பிறரது குற்றம் கானும்
பேய்த்தனம் பெரிதும் உள்ளோன்
பெருகுறு தனது குற்றம்
பேணலின் விலகிச் செல்வான்.

66


பதரெனப் பிறர்குற் றத்தைப்
பாரெலாம் தூற்றும் கீழோன்,
அதிர்வுறச் சூதாட் டத்தில்
ஆடிடும் காய்ம றைத்தே
எதிருளார் பலரைச் சால
ஏய்ப்பவர் போலத் தன்பால்
புதரென மண்டு குற்றம்
புலப்படா தொளித்தல் செய்வான்.

67

23

  1. 65
  2. 66