பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நெருப்பது வேறொன் றில்லை
நிகர்த்திடக்[1] காமத் தீயை;
விருப்பினைப் போன்றதான
விழும்வலை பிறிதொன் றில்லை;
வெறுப்பினை வெல்லத் தக்க
வேறொரு முதலை இல்லை,
அரிப்பதில் வாழ்வாம் மண்ணை,
அவாவைநேர் வெள்ளம் உண்டோ?

68


வானிலே பாதை போட
வல்லவர் யாரும் உண்டோ?
வானிலே துறவி தோன்றார்;
வருவது மண்ணி லேதான்
ஊனு[2]டல் பெற்ற எல்லாம்
ஒருபொழு தழிந்து போகும்
வீணிலே பொழுது போக்கேல்;
விழிப்புடன் அறமே செய்க.

69


19. சான்றோர் இயல்

வன்முறை கொண்டு நன்மை
வாய்த்திடச் செய்வோன் மூடன்;
பன்முறை பேசும் பேச்சால்
படித்தவன் ஆதல் உண்டோ[3]?
நன்முறை கற்ற வண்ணம்
நடப்பவன் கல்விச் சான்றோன்
இன்முறை கொண்டா ராய்ந்தே .
எதையுமே ஏற்றல் வேண்டும்.

7024
  1. 67
  2. 68
  3. 69