பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உறிவுசால் தந்தை தாயோ
உற்றிடும் மக்கள் தாமோ
ஒருவரும் காக்க மாட்டார்
உயிரது பிரியும் வேளை
உறங்கிடும் போது வெள்ளம்
ஊர்முழு வதுமாய்த் தாற்போல்
ஒருவிடின் அறத்தை[1], சாவோ
ஒல்லையில் அடித்துச் செல்லும்.

74


21. பல்வகை இயல்

சிறியதாம் இன்பம் விட்டுச்
சிறந்தபே ரின்பம் நாடீர் !
உரியதைச்[2] செய்யாச் சோம்பும்
உரியதல் லாத ஒன்றைப்
பெரியதாய்ச் செயலும் வேண்டா !
பெற்றிடத் தன்ன லத்தை,
பிறரது நலங்கெ டாமல்
பேணுவீர் நேர்மைப் பாதை.

75


துறப்பதும் கடினம: ஒன்றும்
துறந்திடாத் துய்ப்பும்[3] அஃதே !
சிறப்பொடு, மனைய றத்தைச்
செய்வதும் அரிதே ! தீமை
மறப்பிலா மக்க ளோடு
மகிழ்வதும் இயலா ஒன்றே !
சிறப்புடன் உலகில் வாழ்தல்
செயற்கருஞ் செய்கை யாகும்.

76
26
  1. 73
  2. 74
  3. 75