பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்கமும் நேர்மைப் பண்பும்
உயரறி வோடு பெற்றோர்
இழுக்கிடா தெங்கும் என்றும்
ஏற்றமே பெறுவர் சால.
இழுக்கிலாச் சிறந்த பண்பர்
இமயமாய் உயர்ந்து காண்பர்.
வழுக்கியோர் இருளில் எய்த
வன்கணை[1] போலக் காணார்,

77


22. அளறு இயல்

பிறர்மனை விரும்பும் பேதை
பெரியதாம் பழியும் ஏச்சும்
உறுவதற் காளா கின்றான்,
ஒருசிறு மகிழ்ச்சிக் காக;
அரசரின் ஒறுப்பை[2] அன்னான்
அடைவதும் நிகழக் கூடும்
பிறர்மனை விரும்பாப் பண்பு
பெரியதோர் ஆண்மை யாமே!

78


தருப்பையைத் தவறாய் பற்றின்
தன்கையை அறுத்தல் செய்யும்
துறப்பதாம் போர்வைக் குள்ளே
துய்மைஇல் செயல்கள் செய்வோர்
இறப்பவும் அளற்றுத் துன்பம்[3]
எய்துவர்; இளமை நோன்பும்
முறைப்படி செய்யா ராயின்
முயல்வதால் பயனே இல்லை,

79



27

  1. 76
  2. 77
  3. 78