பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நகரதைப் புறமும் உள்ளும்
நலமுறக் காத்தல் போல,
அகத்தொடு புறமும் உன்னை
அரண்பெறக் காத்துக் கொள்க
அகமு[1] நா ணுவன நாணி,
அஞ்சுவ அஞ்சிக் காக்க,
மிகத்தவ றான நீக்கி
மேன்மையாய் ஒழுகி வெல்க.

80


23. யானை இயல்

எய்திடும் அம்பை யானை
ஏற்றுமே பொறுத்தல் போல,
வைதிடும் பிறரை நீயும்
வலுவொடு பொறுத்துக் கொள்க
உய்தியில்[2] உலகில் தீயோர்
உறுதவ உள்ள தாலே
வெய்துறத் திட்டு வோரே
வெளியெலாம் திரிவர் சால.

81


பழக்கிய யானை கொண்டு
படுகளம் வெல்வர் மள்ளர்;
பழக்கிய யானை மீது
பார்புரப் பவரும்[3] செல்வர்,
இழுக்கமில் பயிற்சி யாலே
எதனையும் அடக்கல் ஒல்லும்
ஒழுக்கமாய்ப் பயிற்றி உள்ளம்
உயர்ந்திடச் செய்தல் வேண்டும்.

82
28
  1. 79
  2. 80
  3. 81