பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பழித்திடும் மலத்தைத் தின்று
பன்றிதான் பெருத்தல் போல,
கொழுத்திடத் தீனி தின்று
குன்றென உடல்வ ளர்த்தால்
இழித்திடத் துயிலும் சோம்பும்[1]
இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளும் ;
செழித்திட முடியா துள்ளம்
சிறப்புறு அறிவு பெற்றே.

83


வெருவரு[2] போரில் தோற்ற
வேந்தனும் விட்டோ டல்போல்,
அறிவொடு பண்புள் ளோரை
அன்புசால் நண்ப ராகப்
பெறுவது முடியா தாயின்
பிரிந்துநீ தனித்து வாழ்க.
அறிவறு மூடர் கூட்டம்
அணுகலும் தீய தாகும்.

84


24. அவா இயல்

உரங்கொளா அவாஆர் உள்ளம்
உறுபொருள் பெறுதற் காகக்
குரங்குபோல் அங்கும் இங்கும்
குதித்துமே தாவிச் செல்லும்.
தரங்குறை அவாமே லிட்டுத்
தாக்கிய போர்தோற் றோரை
அரங்கவும்[3] அழிக்கத் துன்பம்
அறுகுபோல் ஆழ ஊன்றும்.

8529
  1. 82
  2. 83
  3. 84