பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26. பிராமண இயல்

முடியினை வளர்த்து நீள,
முழுவதும் மானின் தோலை
உடையெனக் கொண்டோர் யாரும்
உயர்பிரா மணரா காரே.
உடையதாய்க் கந்தை சுற்றி,
உடல்நரம் புகள்பு றத்தே[1]
அடையவே தெரிய நோன்பை
ஆற்றுவோர் பிராம ணர்தாம்.

95


பிறந்திடும் குலத்தி னாலோ,
பிராமணத் தாய்வ யிற்றில்
பிறந்திடு வாய்ப்பி னாலோ
பிராமணர் ஆகார் யாரும்.
பறந்திட[2]ப் பற்றை நீக்கிப்
படுபொருள் இல்லா தோரே
சிறந்திடும் பிராம ணப்பேர்
சீரொடு கொள்ளத் தக்கார்.

96


மயக்கிடும் வாழ்வாம் சேற்று
வழியினைத் தாண்டி மாறி,
கயக்கிடும்[3] அவாவாம் ஆற்றின்
கரையினைக் கடந்தே ஏறி,
உயக்கொளும் நல்லெண் ணத்தால்
உயிர்க்கெலாம் அறமே செய்து,
வியக்கவே கலந்து வாழ்வோர்
வியன்பிரா மணராம் காண்பீர்.

97

பு–3

33

  1. 94
  2. 95
  3. 96