பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடலினை வாட்ட லாலோ,
உணவினை மிகவும் மாந்தி[1]
உடலினைப் பெருக்க லாலோ
உறுநலம் ஏதும் இல்லை.
கெடலிலா தளவாய் உண்டு,
கிளர்பொறி அடக்கி ஆளும்
நடுநிலை வழியாம் ஒன்றே
நலவழி பயப்ப துண்மை.

6


காட்டிலே புல்லைத் தின்றால்
காணலாம் 'மோட்சம்' என்றால்,
காட்டுள மான்கள் யாவும்
கானுமோ மோட்ச வீட்டை?
ஈட்டமாம்[2] நீருள் தங்கின்
எய்தலாம் 'மோட்சம்' என்றால்,
கூட்டமாய் நீருள் வாழ்வ
குறுகுமோ வீடு பேற்றை?

7


ஆறுகள் யாவற் றிற்கும்
அளவிலாப் பெயர்கள் உண்டாம்;
ஆறுகள் அனைத்தும் ஓடி
ஆழ்கடல் கலந்த பின்னர்க்
கூறிடும் பெயர்கள் நில்லாக்
கொள்கைபோல் 'சாதி' யாவும்
வேறறு கழகம்[3] சாரின்
விரைவிலே மறைந்து போகும்.

8

39

  1. 6
  2. 7
  3. 8