பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இறைவரே உலகில் எல்லாம்
இயற்றினார் என்றால், அந்த
இறைவரே, பற்பல் தீமை
இயற்றுவோர்க் கெலாம்பொ றுப்போ?
இறைவரை நோக்கி ஏதும்
ஈகென வேண்ட லின்றி
முறைவழி கடமை ஆற்றின்
முன்னுவ[1] எல்லாம் முற்றும்.

9


அறவுரை வழங்கல் எல்லா
அறங்களின் சிறந்த தாகும்.
அறம்உரை சுவையின் மிக்க
அருஞ்சுவை யாதும் இல்லை.
அறம்தரும் இன்பின்[2] மேலாய்
ஆர்ந்திடும் இன்பம் உண்டோ
அறந்தனை இறுகப் பற்றி
அவாவினை அறுத்து வாழ்க.

10


(வேறு)


அறமென்னும் விளைநிலத்தில் அவாவென்னும் களையகற்றி
அறிவென்னும் கலப்பையுடன் ஆள்வினையாம் காளைபூட்டி
                                              
அறஉழுதே[3], அரியகாட்சி யாம்விதைகள் ஆரஇட்டே,
                                             
அரியபண்பாம் நீர்பாய்ச்சி அமைதியினை விளைத்திடுவீர்.

11

40

  1. 9
  2. 10
  3. 11