பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

நூல் அமைப்பு : ‘கவுதம புத்தர் காப்பியம்’ என்னும் காப்பியம் ஒன்று அடியேன் இயற்றியுள்ளேன். அதனையடுத்து, புத்தரின் பொன்னான அறிவுரைகள் பலவற்றை நூறு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களில் தொகுத்து ‘புத்தர் பொன்மொழி நூறு’ என்னும் இந்நூலை இயற்றினேன்.

நன்கொடை அளிப்பவர்கள், 101 உரூபா அல்லது 1001 உரூபா எனப் பேரெண்ணோடு ஒன்று கூட்டி அளிப்பதுபோல், சரியாக நூறு பாக்களோடு நிற்காமல், வளர்ச்சி முகம் நோக்கி மேலும் ஒரு பாடல் எழுதிச், சேர்த்துள்ளேன். எனவே, இந்நூலுள் 101 பாடல்கள் இருக்கும். வழக்கம்போல் நூலின் தொடக்கத்தில் பாயிரப்பாடல் ஒன்றும், நூலின் இறுதியில் ‘நூல் பயன்’ கூறும் பாடல் ஒன்றும், மேற்கொண்டு கூடுதலாக உள்ளன. இவை இரண்டும் வெண்பாக்கள் ஆகும்.

‘புத்தர் பொன்மொழி நூறு’ என்னும் தொடரில் உள்ள நூறு என்னும் எண்ணுப் பெயர். முதலில், எண்ணல் அளவை ஆகுபெயராக நூறு பாக்களைக் குறித்து, பின்னர் இருமடி ஆகுபெயராக நூறு பாக்கள் உள்ள நூலைக் குறிக்கிறது.

புத்தர் வரலாறு: புத்தர் இந்தியாவின் வடபகுதியில், சாக்கிய நாட்டின் தலைநகரான கபிலவாஸ்த்து என்னும்

iii