பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குறிப்புரை

பாயிரம்—முகவுரை, பொருள்அடக்கம், எ டு த் த து இயம்பல். 1. ஒண்புத்தர்—ஒளிவிடும் புத்தர். 2. அலகில்— அலகு+இல்,—அளவு இல்லாத.

நூல்

3. இரட்டைச் செய்யுள் இயல் தலைப்பு—ஒரே கருத்தை உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் இரண்டு விதமாக இரண்டு செய்யுள்களில், முதல் நூலில் கூறப் பட்டிருப்பதால், இந்தத் தலைப்புக்கு 'இரட்டைச் செய்யுள் இயல்' என்னும் பெயர் தரப்பட்டது. ஆனால், இந்தத் தமிழ்ச் செய்யுள் நூலில், ஒரு கருத்து ஒரே செய்யுளில் மட்டும் கூறப்பட்டுள்ளது.

அருஞ் சொற் பொருள்

1. இரட்டைச் செய்யுள் இயல்

4. ஈர்க்கும்—இழுக்கும். 5. எள்ளி—கேலி செய்து. 6. ஓரின்—உணர்ந்தால், அறிந்தால், 7. ஐம்புலம்—சுவை ஒளி, ஊறு (தொடு அறிவு, ஒலி, மணம் என்பன. 8. சிம்புகள்—மரத்தின் சிறுகிளைப் பகுதிகள், 9. மொய்ம்பு—வலிமை. 10. அடைவுற—பொத்தல் இன்றி நன்றாக அடைத்து. 11. அடைவுற—முற்றிலும், 12. ஈண்டும் — நிறையும். 13. சுரையை ஏட்டில் உண்டவர்—ஏட்டுச் சுரைக்காயை உண்டவர்.

41