பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. புத்தர் இயல்

49. உன்னி—உற்று எண்ணி. 50. தொப்பை—பெரு வயிறு.15, மகிழ்ச்சி இயல்

51. பகையதை — பகைக் குணத்தை (அது—பகுதிப் பொருள் விகுதி). 52 உறுத்துவிக்கும்—உண்டாக்கும் 53. வித்தை—விதையை. 54. யாணர்—புது வருவாய். 55. அறிவர்—மெய்யறிவுடைய மேலோர்.16. விருப்ப இயல்

56. வன்புறு—வன்பு உறு—வன்கண்மை (கொடுமை), உற்ற 57. புணை—தெப்பம்.17. சின இயல்

58. வெருவரும்—அஞ்சத்தக்க. 59. தருக்கி—தருக்கு (செருக்கு) உடையவன். 60. முப்பொழுதும்—இறப்பு—நிகழ்வு—எதிர்வு என்னும் மூன்று காலத்திலும், 61. உள்ள லில்—நினைப்பதில்.18 மாசு இயல்

62. ஒல்லையில்—விரைவில். 63. பழ மறை—பழம் பெருமை உடைய வேதம் 64. ஆயவை—ஆகிய (தீய) குணங்கள். 63. விஞ்சிடும்—மிகுகின்ற, 66. இம்மியும்—சிறிதும், 67. நிகர்த்தல்—ஒத்தல், 68, ஊன்உடல்—மாமிச உடம்பு.

44