பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடத்தில், சுத்தோதனன் என்னும் அரசனுக்கும் அரசி மாயா தேவிக்கும் மகனாகக் கி.மு. 563ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இளமையிலேயே வா ழ் க் கை யி ல் வெறுப்புற்றிருந்தார். ஆயினும், தந்தையின் முயற்சியால், யசோதரை என்னும் பெண்ணை ம ண ந் து கொண்டார்; இராகுலன் என்னும் மகனையும் பெற்றார். இருபத்தொன்பதாம் அகவையில் மனைவி, மகன் முதலிய சுற்றத்தார் அனைவரையும் விட்டு நீங்கி துறவு கொண்டு காட்டில் ஆறு ஆண்டு அருந்தவம் புரிந்து, பின்னர், ஆழ்ந்த எண்ணத்தால் (தியானத்தால்) மெ ய் ய றி வு (போதம்) பெற்றுப் ‘புத்தர்’ என்னும் பெயருக்கு உரியவரானார். இவரது இளமைப் பெயர் சித்தார்த்தன் என்பதாகும்.

புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றி அவருக்கு அன்பராகவும் அடியவராகவும் பலர் இருந்த தன்றி, துறவறத்தையும் பலர் மேற்கொண்டனர். புத்தர் சங்கம் அமைத்துத் தம் கொள்கைகளை உலகெங்கும் பரவச் செய்தார். அவரது அறநெறி ‘பெளத்தம்’ என்னும் ஒரு புது மதமாக உருவெடுத்தது. வேத வைதிக நெறிக்கு எதிராகப் பெளத்தம் செயல்பட்டது, புத்தரின் அறவுரைகள் பெளத்த மறை நூல்களாகக் தொகுக்கப் பெற்றன,

புரட்சியாளராகவும், சீர்திருத்தக்காரராகவும், பகுத்தறி வாளராகவும் விளங்கிய புத்தர், பல அருஞ்செயல்கள் ஆற்றி குசீ என்னும் இடத்தில் கி.மு. 483 ஆம் ஆண்டு தம் எண்பதாம் அகவையில் இறுதி எய்தினார். இது புத்தரின் சுருக்கமான வரலாறு.

புத்தரின் புரட்சிக் கொள்கைகள்: புத்தர் புரட்சி மிக்க கொள்கையாளர். "கடவுள் என ஒருவர் இல்லை; அப்படி ஒருவர் இருந்து கொண்டு எதையும் படைக்கவில்லை; எனவே கடவுள் பற்றிக் கவலைப்பட வேண்டா. உயிர் எனத் தனியே ஒன்று இல்லை. உடலில் உள்ள

iv.