பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 உறுப்புக்கள்.ஒருங்கிணைந்து செயற்படும் இயக்க ஆற்றலே உயிர் எனப்படுவது. துறக்கம் (சுவர்க்கம்) என ஒன்று இல்லை, எனவே இல்லாத ஒன்றை அடைய வீண், முயற்சி செய்ய வேண்டா."

“ஏதோ நற்பேறு பெறலாம் என்ற நம்பிக்கையில், பட்டினியாலும் கடுந்தவ முறையாலும் உடலை அளவு மீறி, வருத்தி வாட்டலாகாது; அதேபோல, அளவு மீறி உண்டு கொழுத்து உடலைப் பெருக்கச் செய்யவும் கூடாது; தேவையானபோது தேவையான அளவு உணவு கொண்டு உடலை ஓம்பி, நல்லன நாடும் ‘நடுநிலை வழி’யே வேண்டத் தக்கது.”

"பேரவாக்களே (பேராசைகளே) எ ல் லா வ கை த், துன்பங்கட்கும் முதல் (காரணம்) ஆகும்; எனவே பேரவாக்களை ஒழிக்க வேண்டும். நல்லொழுக்க-நல்லற நெறிகளைப் பின்பற்ற வேண்டும். நல்லன கொண்டு அல்லன நீ க் க வேண்டும். எவ்வுயிருக்கும் தீமை செய்யாது நன்மையே செய்ய வேண்டும். இன்ன பிற நன்முறைகளைக் கைக்கொள்ளின், கிடைக்கக் கூடிய தற்பயன் கி டை த் தே தீரும்ட- புத்தரின் புரட்சிக் கொள்கைகளுள் இன்றியமையாதவை இவை.

முதல் நூல்: மற்ற மதங்கட்கு மறைநூல் (வேதம்). இருப்பது போலவே, பெளத்த மதத்திற்கும் மறைநூல்கள் உண்டு. அவை புத்தரின் அறநெறிக் கோட்பாடுகளின் தொகுப்பாகும். ‘திரிபிடகம்’ (மூன்று நூல்கள் என்னும், தொகுப்புப் பெயருடன், சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்னும் மூன்று மறை நூல்கள் பெளத்தத்திற்கு உள்ளன. இவற்றுள் ஒன்றான சுத்த பிடகத்தில், ‘நிகாயம்’ என்னும் பெயர் உடைய ஐந்து பிரிவுகள் உள்ளன. இவ்வைந்து நிகாயங்களுள் ஒன்றான ‘குந்தக நிகாயம்’ என்னும் பிரிவில் ‘தம்ம பதம்’ என்னும் ஒரு

v