பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுதி உள்ளது அற (தரும) நெறியை வற்புறுத்தும் 'தம்ம பதம்' என்பது, பெளத்த மதத்திற்கு மிகவும் இன்றியமையாத மறைநூல் பகுதியாகும்.

இந்தத் 'தம்மபதம்' என்னும் பிரிவுநூலில், 'இரட்டைச் செய்யுள் இயல்' (யமக வர்க்கம்) முதலாகப் பிராமண இயல்; (பிராமண வர்க்கம்) ஈறாக இருபத்தாறு (26) பிரிவுகள் உள்ளன. இந்த இருபத்தாறிலும் மொத்தம் நானுற்று இருபத்து மூன்று (423) அறவுரைகள் (உபதேசங்கள்) அடங்கியுள்ளன. தம்மபதம் பாலி மொழியில் எழுதப்பட்டது.

மொழி பெயர்ப்புகள்: தம்மபதம் பாலி மொழியிலிருந்து பிறமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களும், நிலக்கொடை இயக்கத் தலைவராயிருந்த விநோபா அவர்களும், ஆங்கில அறிஞர் மாக்சுமில்லர் அவர்களும் இதனை ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளனர். தமிழிலும் இரண்டு மொழி பெயர்ப்புகள் உள்ளன. இவற்றின் துணை கொண்டு, உயர்திரு அ. லெ. நடராசன் அவர்கள் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். எளிய உ ரை நடையில் உள்ளது இப்பெயர்ப்பு.

கி. பி. 1979 ஆம் ஆண்டில் வெ ளி யா ன திரு. அ. லெ. நடராசன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலின் மு த ல் பதிப்பைப் படித்த யான், அந்நூலின் துணைக்கொண்டு நானூற்று இருபத்து மூன்று அறவுரைகளுள் மிகவும் சிறப்பாகத் தோன்றிய நூற்றுக்கு மேற்பட்ட அறவுரைகளை நூற்றொரு பாடலில் தொகுத்து இந்நூலாக யாத்துத்தந்துள்ளேன்.

உரைநடை வடிவத்தினும் செய்யுள் வடிவத்திற்குத் தனி மதிப்பு உண்டு. செய்யுள் வடிவம், நெட்டுரு செய்து நினைவில் இருத்திக் கொள்வதற்கு ஏற்றது. செ ய் யு ள் வடிவில் கருத்துக்களைக் கூறின், மக்கட்கு நன்மதிப்பும்

vi