பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II பர்மாவிலும், இலங்கையிலும், நேபாளத்திலும், திபேத்தி லும் மற்றும் பல இடங்களிலும் பெளத்தம் பல்கிப் பெருகி வந்தது. பெளத்த பிக்குகளும், சிற்பிகளும், கலைஞர்களும் நான்கு திசைகளிலும் பரந்து சென்று போதி வேந்தரின் உபதேசங்களைப் பரப்பி வந்ததோடு, ஆலயங்கள் அமைத்தும், சிலைகள் நிறுவியும், நூல்கள் இயற்றியும் பெருந் தொண்டாற்றி வந்தனர். பெளத்த கருமத்தின் பண்பாட்டைப் பர்மாவில் பார்க்கலாம். போதி மாதவரின் புனிதக் கொள்கைகளை இலங்கையிலே மூல மொழி யிலேயே பாதுகாத்து வைத்திருக்கின்றனர். பழம் பெரும் சீனாவில் முன்னாலிருந்த சமயங்கள் இரண்டோடு பெளத்த மும் கலந்து புது உருவம் பெற்று வளர்ந்துள்ளது ஜப்பா னிலே பெளத்த தருமத்தின் பக்தி மார்க்கமாக ஜென் பெளத்தம் செழித்து உரம்பெற்றுள்ளது. இன்று மாநில மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெளத்த தருமத்தைப் போற்றி வருகின்றனர் என்று சொல்லலாம். இன்று புத்தரைப் பற்றியும், 2,500 ஆண்டு கட்கு முன்னர் அவர் அருளிய அரிய உபதேசங்களைப் பற்றியும் உலகின் பல பாகங்களிலும் அளவற்ற ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக் கின்றன. அழிவுப் பாதையில் வேகமாகச் சென்றுகொண்டி ருக்கும் நம் உலகைப் பெளத்த தருமமே பாது காக்கும் என்று அறிஞர் பலரும் கருதுகின்றனர். புத்தர் பெருமானின் உருவ அழகுபற்றி வரலாறுகளும், கதைகளும் ஒரு முகம கப் புகழ்ந்து கூறுகின்றன. பெண் திரையின் மீது விரி கதிர்கள் நான, எரித முல் கொள் மேனி" என்பது தமிழ்ப் பாடல். சிங்கம் போன்ற தோற்றம், ஆண் யானை போன்ற நடை, மானின் கால்களைப் போன்ற கால்கள், மெல்லிய உடல், பொன் நிமம், நீண்ட விரல்கள், தடக் கைகள், சங்கு போல் உ(ாண்ட கனைக் கால்கள், அடர்ந்து இ ருண் ட த லை முடி, கருநீலக் கண்கள், பசுவின் இமைகளை ப் போல் நீண்டு அகன் இமைகள், பவள வாய், முத்துப் பற்கள், அமைதியான ஒளிபரப்பும் திருமுகம்