பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புத்தர் போதனைகள் கல்வாழ்க்கை : தவறான வழியில் வாழ்க்கை கடத்துவதை விட்டு, நியாயமான முறையில் ஆரியச் சிடன் தன் pவனத்துககு வேண்டிய வருவாயைப் பெறுகிறான்,-பிக்குகளே அதுவே நல்வாழ்க்கை கல்லூக்கம்: பிக்குகளே! இதிலே, (சிடன்) இதற்கு முன் தோன்றியிராத ஒழுக்கக் குறைவான நிலைமை கள் எழாதபடி சித்த உறுதியை ஏற்படுத்திக் கொள் கிறான்; அவன் முயற்சி செய்கிறான். (அதற்குரிய) ஆற்றலைப் பயன்படுத்துகிறான். உள்ளத்தை (அதன் மீது) செலுத்திப் போராடுகிறான். இதேபோல, ஏற்கெனவே எழுந்துள்ள திய ஒழுக்கக் குறைவான நிலைமைகளை நீக்குவதற்கும் அவ்வாறே செய்கிறான். இதேபோல, இதுவரை தோன்றியிராத கல்ல நிலைமை களைத் தோற்றுவிப்பதற்காக அவன் அவ்வாறே செய் கிறான். ஏற்கெனவே எழுந்துள்ள நல்ல நிலைமைகள் கிலைபெறுவதற்காகவும், அவை பழுதாவதைத் தடுப்பதற்காகவும், அவை பெருகும்படி செய்வதற் காகவும், அவைகளைப் பழக்கப்படுத்திப் பயன்பெறு வதற்காகவும் அவன் அவ்வாறே செய்கிறான். பிக்கு களே, இதுவே கல்லூக்கம் எனப்படும். நற்கடைப்பிடி பிக்குகளே! இதிலே ஒரு பிக்கு உடல் (கந்தங்களாலாகிய) கலப்பு என்று கருதி' ஊக்கத்துடனும் நிலைத்த சிந்தையுடனும், உலகி லுள்ள பேராசையையும் அயர்வையும் அடக்குவதன் மூலம் சாந்தி பெற்றும் வசித்திருப்பான். (உடலைப் போலவே) உணர்ச்சி சம்பக்கமாபும், புலன்களின்