பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. பன்னிரு நிதானங்கள் பிறவி ஏற்படக் காரணமாகிய விதிகளைப்பற்றி விவாதம் செய்யக்கூடிய அறிவாளர் அநேகர் இங்கே இருக்கின்றனர்; ஆனால் பிறப்பை நிறுத்தும் வழியை அறிந்தவர் ஒருவர்கூட இல்லை! 15

கான் அடைந்த தருமம் ஆழ்ந்த பொருளுடையது, பார்வைக்கு அரியது, உணர்ந்து கொள்வதற்கு அரியது, ே ர் த் தி யா ன து, முதன்மையானது, (சாதாரணச்) சிக்தனைக்கு அப்பாற்பட்டது, நுட்ப மானது, ஞானிகளால் மட்டுமே உய்த்துணரத்தக்கது. ஆனால் மக்களுடைய இந்த உலகம் தான் பற்றுக் கொண்டதை விடாது பிடித்துக் கொள்கின்றது, தான் பற்றுக் கொண்டதில் இன்பமடைகின்றது, தான் பற்றுக்கொண்டதில் திளைத்து கிற்கின்றது. இந்த உலகம் இவ்வாறு (பொருள்களைப்) பற்றிக் கொள்வ தால், சார்புகள்" காரணமாகவே பொருள்கள் உற்பத்தி

  • சார்புகள் காரணமாகப் பொருள்கள் உற்பத்தி யாவதைப் பதிச்ச.சமுப்பாதம்' என்று பெளத்த தருமம் கூறும். சார்புகள் என்பவை நிதானங்கள் அல்லது காரணங்கள்; அவை பன்னிரண்டு:

1. பேதைமை-(அவித்தை) 2. செய்கை-(ஸம்ஸ்காரங்கள்) 3. உணர்ச்சி-(விஞ்ஞானம்) 4. அருவுரு-(நாமரூபங்கள்) புத்-8