பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 இத்தனை எழில் நலன்களும் கொண்டு, அவர் மக்களையும் மன்னர்களையும், மறையோர்களையும் வசீகரித்து வந்த தில் ஆச்சரியமில்லை யென்றே தோன்றுகிறது. எல்லாவற் றிற்கும் மேலாக, அவருடைய குரல் இமயமலைச் சாரலிலே யுள்ள இசைப் பறவையின் குரலைப் போன்றது என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. புத்தர் சாத்திரங்களையோ, புராணங்களையோ மேற் கோள்களாகக் கொள்ளவில்லை. கண் முன்பு கண்ட விஷயங்களையே ஆதாரமாய்க் கொண்டு, பகுத்தறிவுக்கு ஒத்த முறையிலேயே உபதேசங்கள் செய்து வந்தார். உலகில் எங்கனும் துக்கம் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர் அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தார். துக்கத்தின் காரணம் ஆவா. அவ1 வின் காரணம் பேதைமை என்பது அவர் முடிபு. இவைகளை நீக்கி, மனிதன் விடுதலை பெற்று முன்னேறி, நிருவானப் பேற்றை அடைவற்கு அவர் வகுத்துள்ள வழி அஷ்டாங்க மார்க்கம்.* முதலாவதாகத் தெளிந்த பார்வை. நற்காட்சி-வேண் டும். இதனாலேயே பொருள்களின் உண்மை இயல்பை உணர முடியும். புலன் இன்பங்களைத் துறந்து, மனக் காழ்ப்பில்லாமல், அஹிம்சை நெறியிலே நிற்கவேண்டும். இது நல்லுற்றம். பொய்யுரை, புறங்கூறல், நிந்தனை, பயனற்ற சொல் ஆகியவைகளிலிருந்து விலகி நிற்றல் நல்வாய்மை யென்ற மூன்றாம் படி. உயிர்க்கொலை நீக்கி, களவு, கவறாடலை ஒழித்து, தவறான சிற்றின்ப வேட்கை களை அடக்கி வாழ்தல் நான்காம் படியாகிய நற்செய்கை. இதற்கு மேலாக, வாழ்க்கை நடத்தும் முறையும் துாயதா யிருக்க வேண்டும். புலால், மீன் முதலியவை விற்றல், வெட்டுவதற்காக விலங்குகள் விற்றல், மது வகைகள், இலாகிரிப் பொருள்கள், விஷங்கள், கொலைக் கருவிகள் முதலியவைகளில் வாணிபம் செய்தல் முதலிய தீய கருமங் - - --- _

  • இந்நூல் பக்கம் 101-பார்க்க.