பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புத்தர் போதனைகள் யாகின்றன என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது கடிைடமாயுள்ளது. செயல்கள் யாவும் ஒடுங்கிய நிலையை அடைய முடியும் என்பதையும், பிறவிக்குக் காரணமான அடிப்படைகள் யாவற்றையும் ஒதுக்கிவிட முடியும் என்பதையும், வேட்கையை அழித்தல், உணர்ச்சிகளை அடக்கல், சிந்தையை அடக்கியே சும்மா இருத்தல் ஆகியவையே கிருவானம் என்பதை யும் மக்கள் புரிந்துகொள்வது சஷ்டமேயாகும்." இப்பொழுது எது இருப்பதால் அழிவும் மரணமும் ஏற்படுகின்றன? அழிவுக்கும் மரணத்திற்கும் காரண மாயுள்ளது எது? எங்கே பிறப்பு உளதோ, அங்கே அழிவும் மரண மும் இருக்கின்றன: அழிவும் மரணமும் பிறப்பினால் நிர்ணயிக்கப்படுகின்றன. 5. வாயில்-(ஷடாயதனங்கள்) 6. ஊறு-(ஸ்பரிசம்) 7. நுகர்ச்சி-(வேதனை) 8. வேட்கை-(திருஷ்ணை) 9. பற்று-(உபாதானம்) 10. கருமத்தொகுதி-(பவம்) 11. தோற்றம்-(பிறப்பு) 12. வினைப்பயன்-(மரணம்) பேதைமையிலிருந்து செய்கையும், செய்கையிலிருந்து உணர்ச்சியும், இவ்வாறே ஒன்றைக் காரணமாகக் கொண்டு அடுத்ததும் தோன்றும். எனவே பிறப்புக்கு மூலகாரணம் பேதைமை.