பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 115 எது இல்லாமலிருந்தால், பிறப்பு, தோற்றம், பற்று, வேட்கை, நுகர்ச்சி, ஊறு, ஆறுவகைப் புலன்கள், (காம-ரூபமாகிய) மனமும்-உடலும் ஏற் படுகின்றன? மன-உடலை கிர்ணயிக்கும் காரணம் எது? உணர்ச்சி (விஞ்ஞானம்) எங்கே உளதோ, அங்கே மன-உடலும் உண்டு: மன-உடலின் தோற்றத் திற்கு உணர்ச்சியே காரணம். இப்பொழுது எது இருப்பதால், உணர்ச்சி இருக் கின்றது? உணர்ச்சிக்குக் காரணமானது எது? மன-உடல் எங்கு இருக்கின்றதோ, அங்கே உணர்ச்சியும் உளது: மன-உடலே உணர்ச்சியை நிர்ணயிக்கின்றது. இந்த உணர்ச்சி மன-உடலிலிருந்து திரும்பு கின்றது: அதற்கு அப்பால் அது செல்வதில்லை. இந்த அளவுக்கு ஒருவன் பிறக்கலாம், அழியலாம் அல்லது மரிக்கலாம், அல்லது ஒரு கிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறலாம்: அதாவது, மன-உடல் æsfr MrGoðTLDsrss 2— 6ððrfr<F&Fl அமைகின்றது: உணர்ச்சி காரணமாக மன-உடல் அமைகின்றது. மன-உடல் காரணமாக ஆறுவகை வாயில்களும் அமைகின்றன. ஆறு வகை வாயில்கள் காரணமாக ஊறு (ஸ்பரிசம்) முதலியவையும் அமைகின்றன. பிக்குகளே! துக்கம் யாவும் தோன்றுவது இவ்வாறுதான். எங்கே மறுபிறப்பு இல்லையோ, அங்கே அழிவும் மரணமும் இல்லை. மறுபிறப்பு கின்றதும், அழிவும் மரணமும் கின்றுவிடுகின்றன .