பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 117 வாயில் மீள, ஊறு மீளும், ஊறு மீள, நுகர்ச்சி மீளும், நுகர்ச்சி மீள, வேட்கை மீளும், வேட்கை மீளப் பற்று மீளும், பற்று மீளக் கருமத் தொகுதி மீளும், கருமத்தொகுதி மீளத் தோற்றம் மீளும், தோற்றம் மீளப் பிறப்பு மீளும், பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு அவலம் அரற்றுக்கவலை கையாறு என்(று) இக் கடையின் துன்பம் எல்லாம் மீளும்...”*

  • துக்கம் அனைத்திலிருந்தும் மீட்சி பெறுதல் இவ்வாறுதான்.'

홍 பிக்குகளே! வினைப்பயன் (முதுமை, மரணம் முதலியவை) என்பது என்ன? குறித்த மனிதர்களும், (விலங்கு, பறவை முதலிய இனங்களில்) குறித்த இனத்தைச் சார்ந்தவைகளும் தளர்ச்சியுறுதல், முதுமையடைதல், சிதைவுறுதல், கரைத்தல், சுருக்கு விழுதல், ஆயுள் குறுகல், வலிமை யும் உணர்வுத் திறன்களும் குன்றுதல் ஆகியவையே அது. அது முதுமை எனப்படும். குறித்த மனிதர்கள் அல்லது ஜந்துக்கள் அழிந்து ஒழிதல், சிதறுண்டு போதல், மறைதல், நிலையற்றுப் போதல், மரித்தல், ஒரு முடிவுக்கு வருதல், கந்தங்கள் சிதைந்து பிரிதல், உடல் அழிதல்- இது மரணம் எனப்படும். இந்தத் தளர்ச்சியும், இந்த இறப்பும் மூப்புச்சாக்காடு எனப்படும்.

  • மணிமேகலை