பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 119 பிக்குகளே! நுகர்ச்சி என்பது என்ன? நுகர்ச்சியில் ஆறு தொகுதிகள் உண்டு: கட்புலன் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, செவிப்புலன் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, காசி சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, கா சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, உடல் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, மனம் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி,இது நுகர்ச்சி எனப்படும். பிக்குகளே! ஊறு (ஸ்பரிசம்) என்பது, என்ன? ஊறு ஆறு தொகுதிகளுள்ளது; கண், செவி, காசி, கா, உடல், மனம் ஆகிய ஒவ்வொன்றின் சம்பந்தமாகத் தோன்றும் ஸ்பரிசம்-இது ஊறு எனப்படும். பிக்குகளே! வாயில் (ஆறு வகைப் புலன்) என்பது στο ότσστ 2 கண், செவி, காசி, கா, உடல், மனம் ஆகிய புலன் களில் ஒவ்வொன்றும் (வாயிலாம்)-இது வாயில் (ஆறு வகைப் புலன்) எனப்படும். பிக்குகளே! அருவுரு என்பது என்ன? உணர்வு, பகுத்தறிதல், தீர்மானித்தல், வெளித் தொடர்பு கொள்ளல் ஆகிய மன நிகழ்ச்சிகள் அருவம் எனப்படும். கால்வகைப் பூதங்களும், அவைகளை ஆதாரமாய்க் கொண்ட உடலும் உருவம் எனப்படும். அருவமும், உருவமும் இத்தகையது. (இவை இரண்டும் சேர்க் த) இது அருவுரு எனப்படும்,